FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Wednesday, September 02, 2015

விதைக்கலாம் முதல் நிகழ்வு

வணக்கம் நண்பர்களே!
         நமது அமைப்பின் முதலாவது நிகழ்வு 30/08/2015(ஞாயிற்றுகிழமை) அன்று அரங்கேறியது. கலாமினால் ஒன்று திரண்ட அமைப்பின் நோக்கம் இனிதே துவங்கப்பட்டது.

         முதல் நிகழ்வு இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரங்கேறியது. அமைப்பின் முதல் வாய்ப்பை தானாக முன்வந்து ஏற்றுக்கொண்ட திரு.காசிபாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

        முதல் நிகழ்வில் தங்கள் முழு ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் அளித்த திரு.கஸ்தூரிரெங்கன்  அய்யா , திரு.காசிபாண்டி , திரு.கார்த்திகேயன், திரு.ஸ்ரீமலையப்பன், திரு.பாக்கியராஜ், திரு.பிரபாகரன், திரு.நாகபாலாஜி ஆகிய அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

       அமைப்பின் முதல் நிகழ்வில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் மரக்கன்று அனைத்திற்கும் கூண்டுகளும் நிறுவப்பட்டது.

      மரக்கன்றுகள் அனைத்தும் காலை 8.30 மணிக்குள் நடப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது. அனைவர் மனதிலும் அமைப்பு துவக்கப்பட்ட மகிழ்ச்சி துளிர்விட்டது.

     நிகழ்விர்க்கான பேனரையும் மற்றும் மரக்கன்றுகளையும் ஏற்பாடு செய்துகொடுத்த திரு. ராமலிங்கம் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். பேனரை வரைந்து கொடுத்த திரு பன்னீர்செல்வம் அய்யா அவர்களுக்கு நன்றிகள்...

    முதல் நிகழ்விற்கு இடமளித்த பள்ளி தலைமையாசிரியர் அவர்களுக்கு நன்றிகள்.  அடுத்த நிகழ்விற்கான இடம் முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. நிகழ்வில் சிற்சில காரணங்களால்  கலந்துகொள்ள முடியாமல் இருந்தாலும் இந்த அமைப்பிற்கு ஊன்றுகோல்கலாய்  இருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் இல்லாமல் இது சாத்தியப்படவில்லை...

                                                                                                  நன்றிகளுடன்,
                                                                                      விதைக்KALAM குழுவினர்.

                                                                                                           

       










6 comments:

  1. "விதை-கலாம்" குழுவினர்க்கு எனது வணக்கம் கலந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இதுபோன்ற பாராட்டுகள் வாழ்த்துக்கள் எங்களை உற்சாகமூட்டுகிறது அய்யா....நன்றி அய்யா....தொடர்வோம் சேவையை

      Delete
  2. வருகைக்கும் கருத்திற்கும் மிகுந்த நன்றி அய்யா...

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Popular Posts