FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Sunday, September 13, 2015

                             
மூன்றாம் நிகழ்வு 


                        விதைக்கலாமின் மூன்றாம் நிகழ்வு இன்று (13-09-2015) புதுக்கோட்டை த.சு.லு.தி (TELC) மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. விதைக்கலாமின் அனைத்து உறுப்பினர்களும் நிகழ்வில் பங்குபெற்றனர். 

                              காலை 6.30 மணியளவில் நிகழ்வு தொடங்கியது, முதல் கன்றை  திரு. கிருபாகரன் அய்யா மற்றும் திரு சிவராஜா அய்யா இருவரும் இணைந்து நட்டனர் மற்ற கன்றுகளும் புதிதாக வந்த உறுப்பினர்களால் நடப்பட்டது. நிகழ்வில் புதிய உறுப்பினர்களாக திரு. அப்துல் ஜலில், திரு. நாகநாதன் மற்றும் திரு. முகமது இப்ராகிம் ஆகியோர் இணைந்தனர்.

          இந்த நிகழ்வைத் தொடர்ந்து விதைக்கலாமின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 

                        திரு. காசிப்பாண்டி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

                     கூட்டத்தின் முதல் நிகழ்வாக திரு. முத்துநிலவன் அய்யா அவர்கள் அமைப்பிற்காக ரூ. 1000 வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது ( அய்யா நிதி அளித்ததே மெய்சிலிர்க்க வைத்த  இனிப்பான சம்பவம். அதைப்பற்றி ஒரு பெரிய பதிவை பிறகு வெளியிடுகிறேன்). 

       கூட்டத்தில் அமைப்பை அங்கிகரிக்கப்பட்ட அமைப்பாக மாற்றுவதற்காக சட்ட ஆலோசனை  பெற அறிவுறுத்தப்பட்டது. 

                         மரக்கன்றுகளை இன்னும் எளிதாக பெற ஆலோசனை கேட்கப்பட்டது.

                          ஏற்கனவே நட்ட மறக்கன்றுகளைப்பற்றி நலம் விசாரிக்கப்பட்டது.

     அடுத்த நிகழ்விர்க்கான இடமாக அரசு மேல்நிலைப்பள்ளி சந்தைப்பேட்டை தெரிவுசெய்யப்பட்டது.

                           நிதி வரவு- செலவு பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

                   திரு. நாக பாலாஜி அவர்கள் 10 நிமிடங்கள் மியுடுவல் பண்ட்ஸ் பற்றி விளக்கமளித்தார்.
                          
                    திரு. கிருபாகரன் அய்யா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் 

                 திரு. முகமது இப்ராகிம் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவருக்கு திரு. மணிசங்கரன் அய்யா அவர்களின் கைகளால் ஒரு மரக்கன்று பரிசளிக்கப்பட்டது.
          
   25 மரக்கன்றுகளை  அமைப்பிற்காக வழங்கிய திரு. உதயகுமார் அய்யா (தோட்டக்கலைத்துறை) அவர்களுக்கு நன்றிகூறப்பட்டது.

                     இறுதியாக  திரு கஸ்தூரி ரெங்கன் அய்யா அவர்கள் நன்றி கூறினார்.

                   அமைப்பு உறுப்பினர் திரு. பாக்கியராஜ் அவர்களின் முயற்சியால் அமைப்பின் மூலமாக பீ  வெல் மருத்துவமனை முன்பாக  வைக்கப்பட்ட கன்றுகள் பார்வையிடப்பட்டது.


                                                                                                                                   









                                    

                                                                                                                                                              நன்றிகளுடன் 
                                                                                                                                           
                                                                                                                                         விதைக்KALAM அமைப்பினர் 

                                 

9 comments:

  1. அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நன்றி சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். நம்முடைய இயக்கம் நம்முடைய விதை'Kalam' நாம் விதைப்போம்...,

    ReplyDelete
  2. அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நன்றி சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். நம்முடைய இயக்கம் நம்முடைய விதை'Kalam' நாம் விதைப்போம்...,

    ReplyDelete
  3. சிறப்புகள் தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. சிறப்பான செயல்! வாழ்த்துகள்

    ReplyDelete
  5. உறுப்பினர்கள் விவரம் இணைக்க அடுத்த வாரம் ஒரு போட்டோ ஷூட்?
    புதிய வளாகங்களில் விருப்பம் கேட்க ஒரு படிவம் ..
    வேண்டுமே விரைவில்

    ReplyDelete
  6. இதுவரை பதிவான இடங்களின் விவரமும் வேண்டுமே

    ReplyDelete
  7. நமது “வலைப்பதிவர் சந்திப்பு 2015“ வலைப்பக்க வழியாக விதை-கலாம் பரவலாக அறியப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தளத்தில் உங்களைஅறிமுகப்படுத்தியிருப்பதைப் பார்த்து மகிழ்ந்தேன். நீஙக்ளும் பார்க்க - http://engalblog.blogspot.com/2015/09/blog-post_12.html பணிகள் தொடர்க!

    ReplyDelete
  8. வெப்பமாகி வரும் புவிக்குப் பசுமைப் போர்வையளிக்க முனைந்த நிற்கும் விதைக் “கலாம்“ குழுவினரின் தொண்டு தொடரந்திட வாழ்த்துகள்.

    ReplyDelete

Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Popular Posts