FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Monday, May 23, 2016

விதைக்கலாம் ௩௯

போன வாரம் திங்கள்கிழமை ஒரு அலைபேசி அழைப்பு நண்பர் மகேஷ் அசோகன் ( புதுகையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் ) அவர்களிடமிருந்து ... என்னடா இவன் திடீர்னு போன் பன்றாறேனு ஒரு பதட்டம் இருந்தாலும் எடுத்து ஹலோ என்றவுடன் ( தமிழ்ழ இந்த ஹல்லோ மாதிரி நச்சுனு ஒரு வார்த்த கண்டுபிடிங்கப்பா வணக்கத்த தவிர ) மச்சி என் நண்பன் சதீஷ் வீட்டுக்கு மரம் வைக்கணும்டா அதுவும் உடனே என்றார் ... சரி எந்த இடம் என்றவுடன் இடத்தை கேட்டு  குறிப்பெடுத்துகொண்டேன் ...

சதிஷ் ( புதுகை வசந்த் அண்ட் கோ –வின் ஊழியர் ) வீடு டீச்சர் காலனியில் 22-05-2015 காலை எப்பொழுதும்போல் சென்றுவிட்டோம் ( முதல்நாள் எத்தனை பேர் வருவீர்கள் என்று சதீஷ் கேட்டபோது ஒரு முப்பது என்றேன் போனில்  ஒரு அனாயசமான ரியாக்சன் கொடுத்தார் சதீஷ் நேரில் காணமுடியவில்லை ).


இந்தவாரம் என்னுடைய நண்பர் திரு . சங்கர்பாபு புதிய உறுப்பினராக சேர்ந்துகொண்டார் .. இந்த வாரத்தின் முதல் கன்றை சதீஷின் தந்தையும் மற்றவற்றை விதைக்கலாமின் உறுப்பினர்களும் ஒவ்வொன்றாய் வைக்க இறுதி கன்றை நண்பர் சதீஷ் வைத்து நிகழ்வை சிறப்பித்தார் .. நீண்ட நாளைக்கு பிறகு நிகழ்வில் நண்பர் திரு . சாந்தகுமார் அவர்களும் கலந்துகொண்டது மகிழ்ச்சியை தந்தது ( புது மாப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்ககது )



கூட்டத்தில் எங்களுடைய மணி சாரின் தீவிர முயற்சியில் புதுகை பாரத ஸ்டேட் தலைமை வங்கி அமைப்பிற்கு ரூ . 4000/- வழங்கியிருப்பதாக கூறி தொகையை அளித்தார் .. விதைக்கலாம் சார்பில் புதுகை பாரத ஸ்டேட் தலைமை வங்கிக்கும் அதன் முதன்மை மேலாளர் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .. நன்றி மணி அப்பா ...



அடுத்த வார நிகழ்வு எங்கள் எல்லைபட்டி அம்மன் தேநீர் விடுதியை நோக்கி ...

இதுவரை ...
நிகழ்வு                                       - ௩௯ (39)
நட்ட கன்றுகள்                               - ௪௩௧ (431)
இந்தவாரம் பார்வையிடப்பட்ட இடம்  - ஏ. மாத்தூர்
திருப்பி மாற்றவேண்டியது           - ௧





நன்றி தொடர்வோம் நண்பர்களே ....





Related Posts:

  • விதைக்KALAM ::: 39-ம் பயண அழைப்பு விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு, வணக்கம். 39-ம் பயண அழைப்பு நாளை (22-5-2016) காலை 5.30 மணியளவில் நமது 39-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை காமராஜபுரம் DRR வீதி முக்கம் அருகில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவின… Read More
  • விதைக்கலாம் 38 விதைக்கலாமின் 38 - ஆவது நிகழ்வு புதுக்கோட்டை பூங்கா நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது ..  நிகழ்வில் மதிப்புமிகு பிரபல  பதிவர் அய்யா . திரு . வெங்கட் நாகராஜ் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பு செய்தார… Read More
  • விதைக்கலாம் அவசர கூட்ட அழைப்பு விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு, வணக்கம். நமது அமைப்பை நிறுவனப்படுத்துவது தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் இன்று (26/5/2016) UK Infotech இல் மாலை 7.30 க்கு நடைபெற உள்ளதால் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். … Read More
  • விதைக்கலாம் ௩௯ (39) விதைக்கலாம் ௩௯ போன வாரம் திங்கள்கிழமை ஒரு அலைபேசி அழைப்பு நண்பர் மகேஷ் அசோகன் ( புதுகையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் ) அவர்களிடமிருந்து ... என்னடா இவன் திடீர்னு போன் பன்றாறேனு ஒரு பதட்டம் இருந்தாலும… Read More
  • விதைக்KALAM ::: 40-ம் பயண அழைப்பு விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு, வணக்கம். 40-ம் பயண அழைப்பு நாளை (29-5-2016) காலை 5.30 மணியளவில் நமது 40-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை எல்லைபட்டி அம்மன் டீ ஸ்டால் அருகில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவினர… Read More

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Popular Posts