FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Saturday, February 27, 2016

விதைக்கலாம் அமைப்பின் 26ம் நிகழ்வு வாராப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.. இந்நிகழ்வில் 11 மரக்கன்றுகள் நடப்பட்டன.


நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வாராப்பூர் அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திரு. கருப்பையா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.. இளம் மாணவர்களும் வழக்கம் போல இந்நிகழ்வில் நிறைய பேர் கலந்து கொண்டு நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்தனர்.
நிகழ்வுக்கு தனது டெம்போ ட்ராவலர் வாகனத்தை நட்பின் அடிப்படையில் வழங்கியிருந்தார் Pudukkottai Arunmozhi அவர்கள்..அவருக்கு இந்த இடத்தில் நம் அமைப்பு சார்பாக நன்றிகள் பல
நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.
இந்நிகழ்வில் நம் அமைப்பு சார்பாக சிவக்குமார் , சந்தோஷ், மணி சார், மலையப்பன், UK கார்த்தி, காசிபாண்டி, ராமலிங்கம், பாலாஜி, பாக்கியராஜ், பாஸ்கர், குருமூர்த்தி, நாகநாதன் கலந்துகொண்டனர்
நிகழ்வு முடிந்து வரும் வழியில் பெருங்களூர் அஞ்சலக வளாகத்தில் ஏற்கனவே நட்டு வைத்திருந்த கன்றுகளை ஆய்வு செய்து வந்தோம்.. எல்லா கன்றுகளும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன என்பதை அறிந்து மகிழ்வுடன் வீடு திரும்பினோம்..
வாருங்கள் நட்புகளே தொடர்ந்து விதைக்கலாம்..

Sunday, February 14, 2016

                                                         விதைக்கலாம் 25

            அப்துல் கலாமின் கனவுகளைக் காதலிக்கும் நம் இளைஞர்கள் குழு அவரின்  நினைவைப் போற்றும் வகையில் "விதைக்கலாம்" என்கிற அமைப்பைத் துவங்கி மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்

                             31.08.2015 அன்று இலுப்பூரில் தங்கள் முதல் மரம் நடும் நிகழ்வினைத் துவக்கிய இந்த குழு பிப்ரவரி 14இல் ஐம்பது மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இது நமது இருபத்தி ஐந்தாம் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வைச் சிறப்பிக்கும் வண்ணம் சிறப்பு அழைப்பாளர்களாக புதுகை சட்டமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் தொண்டைமான் அவர்களும், நகராட்சி மன்றத்தின் தலைவர் திரு. ராஜசேகரன் அவர்களும், நகர்மன்ற துணை தலைவர் திரு. சேட் அவர்களும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டுச் சிறப்பித்தனர்.




                                 விழாவில் கலந்து கொண்ட புதுகைக் கணினித் தமிழ்ச் சங்க நிறுவனர் அய்யா முத்துநிலவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். கணினித் தமிழ்ச்சங்கம், புதுகை ஜே.சிஸ் அமைப்புகள், வீதி இலக்கிய களம் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் இந்நிகழ்வில் பங்குபெற்று சிறப்பித்தனர். நிகழ்வுக்காண நிதியை அமெரிக்கவாழ் தமிழரான திரு.பாலதண்டாயுதம் வீரையா அவர்கள் வழங்கியிருந்தது குறிப்பிடத் தக்கது.

                                  நிகழ்வில் விதைக்கலாம் உறுப்பினர்கள் ஸ்ரீனி மலையப்பன், பாலாஜி, யு கே டெக் கார்த்திக், கஸ்தூரி ரங்கன், சிவக்குமார், நாகநாதன், நாகபாலாஜி, பிரபா, பாக்யராஜ், சந்தோஷ், சுகேஷ், குருமூர்த்தி, பாஸ்கர், ராம்தாஸ் சுகந்தன், ரகுபதி, மற்றும் சேங்கைதோப்பு கால்பந்தாட்ட குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடந்து வந்த பாதை- ஒரு புகைப்பட பயணம்
                                   நமது விதைக்கலாம் அமைப்பு கடந்த 25 வாரங்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். அந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன .




























Wednesday, February 10, 2016

நமது விதைக்கலாம் 24வது நிகழ்வு பொன்னமராவதி அருகே மலையான்ஊரணி கரையில்  நடைபெற்றது. 




நமது  விதைக்கலாம் அமைப்பின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பல்வேறு முக்கியாமான பொது இடங்களில் அனுமதியுடன் இலவச மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது ..

அந்த வகையில் பொன்னமராவதி மலையான் ஊரணிக்கரையில் நடைபெற நிகழ்வில் அமைப்பின் முக்கிய நிர்வாகி இந்திரா நகர் ஆதி மெடிக்கல் சுப்பிரமணியன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முப்பத்திமூன்று மரக்கன்றுகள் ஊரணிக்கரை சுற்றி நடப்பட்டது. 



இவ்விழாவில் நிதியுதவி செய்த லிங்கபைரவி நிதியம் நிறுவனத்தின் அமைப்பினர் சரவணன் அவர்களுக்கு விதைக்கலாம் நிறுவனம் பாராட்டுக்களை வழங்கியது. இவ்விழாவில் லயன் அன்புச்செல்வன், மருத்துவர் பாலு, விதைக்கலாம் உறுப்பினர்கள் கஸ்தூரி ரெங்கன், நாகபாலாஜி, கார்த்திக்கேயன், மலையப்பன், சிவா, பாஸ்கர், நாகநாதன், முகுந்தன், ஸ்ரீதர், ரகுபதி, குருமூர்த்தி, சுகன்தன் மட்டும் உடற்கல்வி ஆசிரியர் முகமது அல்காப் ஆகியோர் கலந்துகொண்டனர்.



இந்நிகழ்வில் கலந்து கொண்ட நம் தோழர்கள் அனைவருக்கும் அன்பாய் சிற்றுண்டி மற்றும் தேநீர் விருந்து அளித்த நல்ல உள்ளங்களுக்கும் இந்த நிகழ்வில் களத்தில் எங்களுக்கு பெரும் உதவியாய் இருந்த குட்டி தோழர்களுக்கும் நன்றிகள் பல..

குறிப்பு: வரும் ஞாயிறு 14.02.2016 அன்று நமது அமைப்பு தொடங்கி 25 வாரம் கடந்து வந்திருக்கும் நிகழ்வை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து உள்ளோம். இந்த நிகழ்வில் 50 மரக்கன்றுகள் நட உள்ளோம்..நமது கொண்டாட்டம் என்பது மரங்கள் நட்டு அழகு பார்ப்பது தானே..

வாருங்கள் நண்பர்களே .. 

ஒன்றாகலாம் 

விதைக்கலாம்

Tuesday, February 02, 2016


ரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விதைக்கலாம் ப்ளாக்கில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி முடிந்தவரை விதைக்கலாம் ப்ளாக் அவ்வபோது அப்டேட் செய்யப்படும் என நம்புவோமாக. இனி வரும் காலங்களில் இந்த தளமானது விதைக்கலாம் நிகழ்வுகள் பற்றியே பதிவு மட்டும் இன்றி பல பயனுள்ள தகவல்களையும் இதன் மூலம் பதிவு செய்யலாம் என்று எண்ணம்.

கடந்தவாரம் மரம் நடும் நிகழ்வு , மனவிடுதி அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. எப்போதும் போலவே நமது விதைக்கலாம் அமைப்பினர் அதிகாலை துயில் கலைத்து களம் நோக்கி புறப்பட்டு குறிப்பிட்ட அந்த பகுதியை அடையும்போது , குளுமையான பனி நீங்கி சூரியன் சுட்டு எரிக்க தயாராக இருந்தார். பள்ளியை அடையும்போது , அந்த பள்ளியின்  தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் எங்களுக்காக காத்திருந்தனர் .

ரொம்பவே மகிழ்ச்சியான விஷயம் என்னவெனில் அந்த பள்ளி மாணவர்கள் தன்னார்வத்தோடு இந்த மரம் நடு நிகழ்வுக்கு தேவையான பெரும்பான்மையான வேலைய செய்து தயார் நிலையில் வைத்தது தான். பின் மனவிடுதி அரசு பள்ளி தலைமை ஆசிரியர்  அவர்கள் முதல் மரக்கன்றை நட தொடர்சியாக மூன்று மரக்கன்றுகள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும், ஊர் பெரியவர்களால் நடப்பட்டது. இந்த நிகழ்வு நடந்து கொண்டு இருக்கும்போது அந்த வழியாக வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு.ரகுபதி அவர்கள் தன்னார்வ அடிப்படையில்  இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது . 

மனவிடுதி அரசு பள்ளி தலைமையாசிரியர் அவர்கள், நம் அமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி தேநீர் விருந்து அளித்து உபசரித்தார். அவருக்கு இந்த இடத்தில் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறோம். 

இந்த நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த அனைத்து நண்பர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இவ்விடத்தில் நன்றியை சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சி. 

வாருங்கள் தொடர்ந்து விதைkalam..

Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Popular Posts