விதைக்கலாமின் ஆறாவது நிகழ்வு
விதைக்கலாமின் ஆறாவது நிகழ்வு (04/10/2015) இன்று புதுக்கோட்டை அய்யர் குளம் குழந்தைகள் மையத்தில் அரங்கேறியது. மரக்கன்றுகள் நட ஏதுவாக குழிகள் அனைத்தும் (03/10/2015) அன்று அமைப்பை சேர்ந்த திரு.ஸ்ரீ மலையப்பன் , திரு.கார்த்திகேயன், திரு.நாகபாலாஜி , திரு.ஸ்ரீதரன் அவர்களால் ஏற்பாடு செய்ய பட்டிருந்தது , அவர்களுக்கு அமைப்பின் சார்பாக வாழ்த்துகளும் நன்றிகளும்.
மரக்கன்றுகள் அனைத்தும் திரு.காசிபாண்டி மற்றும் திரு.முகுந்தன் அவர்களால் பெறப்பட்டது. கன்றுகளுக்கான கூண்டுகள் அனைத்தும் அமைப்பின் உறுப்பினர்களால் பெறப்பட்டது.அவர்களுக்கு அமைப்பின் வாழ்த்துகளும்,நன்றிகளும்.
காலை 6.30 மணி அளவில் நிகழ்வு தொடங்கியது, முதல் கன்றை குழந்தைகள் மைய ஆசிரியை திருமதி.கல்யாண மீனாட்சி அவர்களால் நடப்பட்டது. மேலும் உள்ள கன்றுகளை திரு.அப்துல்லா, திரு.மனோஜ் உள்ளிடோரால் நடப்பட்டது.
இதை தொடர்ந்து விதைக்கலாமின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. மரக்கன்றுகள் எளிதில் பெற ஆலோசனைகள் உறுப்பினர்களிடம் பெறப்பட்டது.
ஆலோசனைக்கு பிறகு மரக்கன்றுகளை நாமே தயார் செய்ய அனைவராலும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது. மரக்கன்றுகளை தயார் செய்யும் முழு பொறுப்பையும் திரு.நாகபாலாஜி அவர்கள் ஏற்று கொண்டார், அவருக்கு அமைப்பின் சார்பாக வாழ்த்துகளும் நன்றிகளும்.
மரக்கன்றுகள் மற்றும் கூண்டுகள் வாங்க திரு.குணசேகரன், திரு.ஸ்ரீதரன் ஆகியோரால் தலா ரூபாய் 200 நன்கொடையாக வழங்கப்பெற்றது.
Related Posts:
விதைக்KALAM 38-ம் பயண அழைப்பு
அமைப்பு சகோதரர்களுக்கு,
வணக்கம்.
38-ம் பயண அழைப்பு
நாளை (15-5-2016) காலை 5.30 மணியளவில் நமது 38-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை பூங்கா நகரில் உள்ள ஐயப்பன் மற்றும் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் … Read More
விதைக்கலாம் அமைப்பின் 23ம் நிகழ்வு
ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விதைக்கலாம் ப்ளாக்கில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி முடிந்தவரை விதைக்கலாம் ப்ளாக் அவ்வபோது அப்டேட் செய்யப்படும் என நம்புவோமாக. இனி வரும் காலங்களில் இந்த தளமானது விதைக்கலாம் நிகழ்வுகள் ப… Read More
விதைக்KALAM: விதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வுவிதைக்KALAM: விதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வு: 22/11/2015 இன்று காலை ஆறரை மணிக்கு விதைக்கலாம் இயக்கத்தின் பயணம் துவங்கியது. மழை மீண்டும் வலுக்க வேறு வழியே இல்லாமல் ராயல் பேக்ஸில...… Read More
விதைக்கலாம் அமைப்பின் 24ம் நிகழ்வு
நமது விதைக்கலாம் 24வது நிகழ்வு பொன்னமராவதி அருகே மலையான்ஊரணி கரையில் நடைபெற்றது.
நமது விதைக்கலாம் அமைப்பின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பல்வேறு முக்கியாமான பொது இடங்களில் அனும… Read More
விதைக்கலாம் அமைப்பின் 26ம் நிகழ்வு
விதைக்கலாம் அமைப்பின் 26ம் நிகழ்வு வாராப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்றது.. இந்நிகழ்வில் 11 மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வாராப்பூர் அரசு பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திரு. கருப்… Read More
0 comments:
Post a Comment