விதைக்கலாம் 25
அப்துல் கலாமின் கனவுகளைக் காதலிக்கும் நம் இளைஞர்கள் குழு அவரின் நினைவைப் போற்றும் வகையில் "விதைக்கலாம்" என்கிற அமைப்பைத் துவங்கி மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்
31.08.2015 அன்று இலுப்பூரில் தங்கள் முதல் மரம் நடும் நிகழ்வினைத் துவக்கிய இந்த குழு பிப்ரவரி 14இல் ஐம்பது மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இது நமது இருபத்தி ஐந்தாம் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வைச் சிறப்பிக்கும் வண்ணம் சிறப்பு அழைப்பாளர்களாக புதுகை சட்டமன்ற உறுப்பினர் திரு.கார்த்திக் தொண்டைமான் அவர்களும், நகராட்சி மன்றத்தின் தலைவர் திரு. ராஜசேகரன் அவர்களும், நகர்மன்ற துணை தலைவர் திரு. சேட் அவர்களும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டுச் சிறப்பித்தனர்.
விழாவில் கலந்து கொண்ட புதுகைக் கணினித் தமிழ்ச் சங்க நிறுவனர் அய்யா முத்துநிலவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். கணினித் தமிழ்ச்சங்கம், புதுகை ஜே.சிஸ் அமைப்புகள், வீதி இலக்கிய களம் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் இந்நிகழ்வில் பங்குபெற்று சிறப்பித்தனர். நிகழ்வுக்காண நிதியை அமெரிக்கவாழ் தமிழரான திரு.பாலதண்டாயுதம் வீரையா அவர்கள் வழங்கியிருந்தது குறிப்பிடத் தக்கது.
நிகழ்வில் விதைக்கலாம் உறுப்பினர்கள் ஸ்ரீனி மலையப்பன், பாலாஜி, யு கே டெக் கார்த்திக், கஸ்தூரி ரங்கன், சிவக்குமார், நாகநாதன், நாகபாலாஜி, பிரபா, பாக்யராஜ், சந்தோஷ், சுகேஷ், குருமூர்த்தி, பாஸ்கர், ராம்தாஸ் சுகந்தன், ரகுபதி, மற்றும் சேங்கைதோப்பு கால்பந்தாட்ட குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடந்து வந்த பாதை- ஒரு புகைப்பட பயணம்
நமது விதைக்கலாம் அமைப்பு கடந்த 25 வாரங்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். அந்த நிகழ்வுகளின் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன .
![]() |
Sirappu... Padangal arumai..
ReplyDelete