FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Wednesday, February 10, 2016

நமது விதைக்கலாம் 24வது நிகழ்வு பொன்னமராவதி அருகே மலையான்ஊரணி கரையில்  நடைபெற்றது. 




நமது  விதைக்கலாம் அமைப்பின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு பல்வேறு முக்கியாமான பொது இடங்களில் அனுமதியுடன் இலவச மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றது ..

அந்த வகையில் பொன்னமராவதி மலையான் ஊரணிக்கரையில் நடைபெற நிகழ்வில் அமைப்பின் முக்கிய நிர்வாகி இந்திரா நகர் ஆதி மெடிக்கல் சுப்பிரமணியன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முப்பத்திமூன்று மரக்கன்றுகள் ஊரணிக்கரை சுற்றி நடப்பட்டது. 



இவ்விழாவில் நிதியுதவி செய்த லிங்கபைரவி நிதியம் நிறுவனத்தின் அமைப்பினர் சரவணன் அவர்களுக்கு விதைக்கலாம் நிறுவனம் பாராட்டுக்களை வழங்கியது. இவ்விழாவில் லயன் அன்புச்செல்வன், மருத்துவர் பாலு, விதைக்கலாம் உறுப்பினர்கள் கஸ்தூரி ரெங்கன், நாகபாலாஜி, கார்த்திக்கேயன், மலையப்பன், சிவா, பாஸ்கர், நாகநாதன், முகுந்தன், ஸ்ரீதர், ரகுபதி, குருமூர்த்தி, சுகன்தன் மட்டும் உடற்கல்வி ஆசிரியர் முகமது அல்காப் ஆகியோர் கலந்துகொண்டனர்.



இந்நிகழ்வில் கலந்து கொண்ட நம் தோழர்கள் அனைவருக்கும் அன்பாய் சிற்றுண்டி மற்றும் தேநீர் விருந்து அளித்த நல்ல உள்ளங்களுக்கும் இந்த நிகழ்வில் களத்தில் எங்களுக்கு பெரும் உதவியாய் இருந்த குட்டி தோழர்களுக்கும் நன்றிகள் பல..

குறிப்பு: வரும் ஞாயிறு 14.02.2016 அன்று நமது அமைப்பு தொடங்கி 25 வாரம் கடந்து வந்திருக்கும் நிகழ்வை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து உள்ளோம். இந்த நிகழ்வில் 50 மரக்கன்றுகள் நட உள்ளோம்..நமது கொண்டாட்டம் என்பது மரங்கள் நட்டு அழகு பார்ப்பது தானே..

வாருங்கள் நண்பர்களே .. 

ஒன்றாகலாம் 

விதைக்கலாம்

Related Posts:

  • விதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வு     22/11/2015 இன்று காலை ஆறரை மணிக்கு விதைக்கலாம் இயக்கத்தின் பயணம் துவங்கியது. மழை மீண்டும் வலுக்க வேறு வழியே இல்லாமல் ராயல் பேக்ஸில் முடங்கினோம். சிறிது நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு.     … Read More
  • விதைக்கலாம் அமைப்பின் 12ம் நிகழ்வு   நமது அமைப்பின் 12ம் நிகழ்வு பயணம் பனையப்பட்டி SMMAR அலமேலு அருணாச்சலம் உயர்நிலைப்பள்ளி நோக்கி சென்றோம். அங்கே மாணிக்கம் அய்யா மற்றும் சண்முகம் அய்யா இருவரும் மரக்கன்று நடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தி… Read More
  • விதைக்கலாம் அமைப்பின் 11ம் நிகழ்வு                            விதைக்கலாம் அமைப்பின் 11ம் நிகழ்வு சமஸ்கிருத ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.          … Read More
  • விதைக்KALAM: விதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வுவிதைக்KALAM: விதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வு:     22/11/2015 இன்று காலை ஆறரை மணிக்கு விதைக்கலாம் இயக்கத்தின் பயணம் துவங்கியது. மழை மீண்டும் வலுக்க வேறு வழியே இல்லாமல் ராயல் பேக்ஸில...… Read More
  • விதைக்கலாம் பத்தாம் நிகழ்வு நாள்: 1/11/2015 காலை :7.30 மணியளவில் இடம்: வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளி சிறப்பு அழைப்பினர்கள்: திரு. Y. ஜெயராஜ் தலைமையாசிரியர், வயலோகம் அரசினர் மேல்நிலைப்பள்ளி திரு. A.கோபாலகிருஷ்ணன் இரவு காவலர், வயலோகம் அரசு மேல்நி… Read More

2 comments:

  1. வணக்கம்,
    தளவடிமைப்பு
    அருமை
    வாழ்த்துகள்
    செயல்படும் ஷிவ்க்கு நன்றிகள்

    ReplyDelete

Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Popular Posts