FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Wednesday, May 18, 2016

விதைக்கலாமின் 38 - ஆவது நிகழ்வு புதுக்கோட்டை பூங்கா நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது .. 

நிகழ்வில் மதிப்புமிகு பிரபல  பதிவர் அய்யா . திரு . வெங்கட் நாகராஜ் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பு செய்தார்கள்  .. மிக்க நன்றி அய்யா .. 

இந்த நிகழ்விற்கு அய்யா வந்ததற்கு இரண்டு காரணங்கள்.. முதல் காரணம் மறந்த நம் அண்ணன் வைகறையின் மகன் கல்வி நிதிக்காக திரு . வெங்கட் நாகராஜ் அவர்களின் மகளுடைய சேமிப்பிலிருந்து கனிச  தொகையை வீதி அமைப்பிடம் தருவதற்காக வந்திருந்தார் ...தொகையை கீதா அம்மா அவர்களோடு விதைக்கலாமும் சேர்ந்து பெற்றுக்கொண்டது ...  கீதா அம்மாவின் வரிகளிலிருந்து 

"ஒரு சிறுபிள்ளை இன்னொரு சிறுபிள்ளையின் துயரம் உணர்ந்து என்று உதவி செய்ய முன்வந்ததோ இந்த நாடு நல்ல நிலைக்கு செல்லவிருக்கிறது" 


நிச்சயம் நடக்கும் அம்மா ...அய்யா அவர்களுக்கும் அவரது மகளுக்கும் விதைகலாமின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் ...

மேலும் அமைபிற்கு என்றும் நல்ல உந்துதல்களையும் ஊக்கத்தையும் வழங்கி எங்களை எப்பொழுதும் வழிநடத்திகொண்டிருக்கும் திருமிகு . முத்துநிலவன் அய்யா அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை விதைக்கலாமோடு கொண்டாடும் விதமாக அமைபிற்கு ரூ.1000 வழங்கினார்கள்.. அதை கீதா அம்மா மற்றும் செல்வகுமார் அண்ணா ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது .. ( விதைகலாமின் முதல் நிதியாளரும் அய்யாதான் .. குறிப்பு : இதுக்கும் மேல சொன்னா அய்யாகிட்ட  திட்டுவாங்கனும் ) .. அடுத்த நிகழ்விற்கு அய்யா வருவதாகவும் கூறியிருக்கிறார் ...( இனி நீங்களும் பிறந்தநாளை அய்யவைபோல் விதைக்கலாமோடு கொண்டாடலாமே !!!)


இந்த வார நிகழ்வில் இன்னும் கூடுதல் சிறப்பாக மூன்று புதிய நண்பர்கள் முறையே திருமிகு. சாதிக் அய்யா , ஜாபார் அய்யா மற்றும் செல்வன் . ஸ்ரீராம் புதிதாக அமைப்பில் இணைந்துள்ளார்கள் ..

38- ஆம் நிகழ்வு ஒரு பிறந்தநாள் நிகழ்வும்கூட ... நம் அருமை நண்பர் திருமிகு . சிவா ஜி ( செல்லமா பேபி ) அவர்களுக்கு  பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .. இவரைப்பற்றி விதைக்கலாம் தொடர் பதிவில் என்னுடைய வலைப்பூவில் எழுத இருக்கிறேன் ... ( தன் பிறந்தநாளில் வைகறை அண்ணாவுக்காக ரூ . 5௦௦- ஐ  கீதா அம்மாவிடம் வழங்கினார் )

மேலும் நிகழ்வை ஏற்பாடு செய்துகொடுத்த அப்பா மணி சார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அய்யா குமாரசாமி அவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் ...

இதுவரை ....

நிகழ்வு : 38

நட்ட கன்றுகளின் எண்ணிக்கை : 425

மேற்பார்வையிட்ட இடங்கள்  : 10




(திருமிகு . சிவா மற்றும் ஸ்ரீராம் மரம் நட்ட போது)



(விதைக்கலாம் புலோ அப் )


( திருமிகு . நிலவன் அய்யாவின் நிதியை கீதா அம்மாவிடமிருந்து பெற்றபோது )


(விதைக்கலாம் என்ஜாய்மென்ட் பகுதி )



( முதல் பார்வையிடல் )


(திருமிகு . சாதிக் அய்யா அவர்கள் )


(படம் - ௨)


(திருமிகு . ஜாபர் அய்யா அவர்கள் )


(திருமிகு . குமாரசாமி அய்யா அவர்கள் )


(கேக் வெட்டுதல் )


பிரபல  பதிவர் அய்யா . திரு . வெங்கட் நாகராஜ் அவர்கள் )

PC : எங்கள் அன்பு கஸ்தூரிரங்கன் அய்யா 

அடுத்த பயணம் காமராஜபுரம் நோக்கி .....



9 comments:

  1. பாராட்டுகள் நண்பர்களே.... உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்......

    ReplyDelete
  2. உங்களுடன் என்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி.
    பணி சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  3. உங்களுடன் என்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி.
    பணி சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  4. உங்களுடன் என்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி.
    பணி சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  5. உங்களுடன் என்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி.
    பணி சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  6. தங்களின் பணி சிறக்கட்டும்

    ReplyDelete

Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Popular Posts