FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Sunday, November 22, 2015

 

  22/11/2015 இன்று காலை ஆறரை மணிக்கு விதைக்கலாம் இயக்கத்தின் பயணம் துவங்கியது. மழை மீண்டும் வலுக்க வேறு வழியே இல்லாமல் ராயல் பேக்ஸில் முடங்கினோம். சிறிது நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு. 

   Balaji அண்ணே மண்வெட்டி பிடி கழண்டுவிட்டது. இங்கே நல்ல மழை என்ன செய்யலாம். 

     கார்த்தியும் வீரமாத்தி சுரேஷ் அவர்களும் ஏதும் மழை பாதுகாப்பு உடையில் வராததால் இபு அவனது மைக்ராவில் அவர்களை அழைத்துவர நாங்கள் கூண்டுகளை எடுத்துக்கொண்டு திருநகருக்கு புறப்பட்டோம். 

   மேட்டுப்பட்டி அருகே இருக்கும் திருநகரின் சமுதாயக் கூடத்தின் அருகே பத்து கன்றுகளை நடத் திட்டம். அங்கே ஒரு குழு ஏற்கனவே பணியில் இருந்தது. பாக்கியராஜ், பாலாஜி மற்றும் ஸ்ரீதர்! சார் இப்படி மழை பேயுதே கன்றுகள் பிழைக்குமா என்று கவலையோடு கேட்டது அந்தக் குழு. நிகழ்வை நடத்த முடியுமா என்று கேள்விகள் எழுந்தன. வேலை துவங்கியவுடன் அந்தச் சந்தேகங்கள் பறந்து எட்டரை மணிக்குள் ஆறு கன்றுகளை நட்டது குழு! 

   தீபாவளி வணிகத்திற்கு பிறகு முதல் முதலாக மீண்டும் இயக்கத்தில் இணைந்த வீரமாத்தி சுரேஷ் பணியினை பெரு மகிழ்வுடன் செய்தார். அவருக்கு ஒரு ஸ்பெசல் நன்றி. 

   நிகழ்வின் நடுவே அலைபேசியில் அழைத்து வாழ்த்திய ஆசிரியர் சோம சுந்தரம் அவர்களுக்கும் நன்றிகள். இத்துடன் மொத்தம் நூற்றி தொண்ணூற்றி ஒரு கன்றுகள் என்று கருதுகிறேன். இயக்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

     அடுத்த நிகழ்வு வள்ளலார் இல்லம் ஏ.மாத்தூர்.

  29/11/2015 காலை ஆறுமணிக்கு இம்பாலா உணவகம் எதிரே இருந்து பயணத்தை துவக்கிறோம். பசுமை நேசர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 

அனைவரும் வருக.





Related Posts:

  • விதைக்KALAM ::: 40-ம் பயண அழைப்பு விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு, வணக்கம். 40-ம் பயண அழைப்பு நாளை (29-5-2016) காலை 5.30 மணியளவில் நமது 40-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை எல்லைபட்டி அம்மன் டீ ஸ்டால் அருகில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவினர… Read More
  • விதைக்KALAM ::: 39-ம் பயண அழைப்பு விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு, வணக்கம். 39-ம் பயண அழைப்பு நாளை (22-5-2016) காலை 5.30 மணியளவில் நமது 39-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை காமராஜபுரம் DRR வீதி முக்கம் அருகில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவின… Read More
  • விதைக்கலாம் ௩௯ (39) விதைக்கலாம் ௩௯ போன வாரம் திங்கள்கிழமை ஒரு அலைபேசி அழைப்பு நண்பர் மகேஷ் அசோகன் ( புதுகையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் ) அவர்களிடமிருந்து ... என்னடா இவன் திடீர்னு போன் பன்றாறேனு ஒரு பதட்டம் இருந்தாலும… Read More
  • விதைக்கலாம் 38 விதைக்கலாமின் 38 - ஆவது நிகழ்வு புதுக்கோட்டை பூங்கா நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது ..  நிகழ்வில் மதிப்புமிகு பிரபல  பதிவர் அய்யா . திரு . வெங்கட் நாகராஜ் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பு செய்தார… Read More
  • விதைக்KALAM 38-ம் பயண அழைப்பு அமைப்பு சகோதரர்களுக்கு, வணக்கம். 38-ம் பயண அழைப்பு நாளை (15-5-2016) காலை 5.30 மணியளவில் நமது 38-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை பூங்கா நகரில் உள்ள ஐயப்பன் மற்றும் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் … Read More

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Popular Posts