FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Saturday, June 04, 2016

விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு, வணக்கம். 41-ம் பயண அழைப்பு நாளை (5-6-2016) காலை 5.30 மணியளவில் நமது 41-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை அடப்பன் வயல் இறைவன் நகர் அருகில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவினர் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம். கூடும் இடம் : இம்பாலா ஹோட்டல் மேலும் விபரங்களுக்கு www.vithaikkalam.blogspot.in இப்படிக்கு விதைக்KALAM அமைப்பினர். நன்றி.

Thursday, May 26, 2016

விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு, வணக்கம். நமது அமைப்பை நிறுவனப்படுத்துவது தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் இன்று (26/5/2016) UK Infotech இல் மாலை 7.30 க்கு நடைபெற உள்ளதால் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு, வணக்கம். 40-ம் பயண அழைப்பு நாளை (29-5-2016) காலை 5.30 மணியளவில் நமது 40-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை எல்லைபட்டி அம்மன் டீ ஸ்டால் அருகில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவினர் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம். கூடும் இடம் : இம்பாலா ஹோட்டல் மேலும் விபரங்களுக்கு www.vithaikkalam.blogspot.in இப்படிக்கு விதைக்KALAM அமைப்பினர். நன்றி.

Monday, May 23, 2016

விதைக்கலாம் ௩௯

போன வாரம் திங்கள்கிழமை ஒரு அலைபேசி அழைப்பு நண்பர் மகேஷ் அசோகன் ( புதுகையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் ) அவர்களிடமிருந்து ... என்னடா இவன் திடீர்னு போன் பன்றாறேனு ஒரு பதட்டம் இருந்தாலும் எடுத்து ஹலோ என்றவுடன் ( தமிழ்ழ இந்த ஹல்லோ மாதிரி நச்சுனு ஒரு வார்த்த கண்டுபிடிங்கப்பா வணக்கத்த தவிர ) மச்சி என் நண்பன் சதீஷ் வீட்டுக்கு மரம் வைக்கணும்டா அதுவும் உடனே என்றார் ... சரி எந்த இடம் என்றவுடன் இடத்தை கேட்டு  குறிப்பெடுத்துகொண்டேன் ...

சதிஷ் ( புதுகை வசந்த் அண்ட் கோ –வின் ஊழியர் ) வீடு டீச்சர் காலனியில் 22-05-2015 காலை எப்பொழுதும்போல் சென்றுவிட்டோம் ( முதல்நாள் எத்தனை பேர் வருவீர்கள் என்று சதீஷ் கேட்டபோது ஒரு முப்பது என்றேன் போனில்  ஒரு அனாயசமான ரியாக்சன் கொடுத்தார் சதீஷ் நேரில் காணமுடியவில்லை ).


இந்தவாரம் என்னுடைய நண்பர் திரு . சங்கர்பாபு புதிய உறுப்பினராக சேர்ந்துகொண்டார் .. இந்த வாரத்தின் முதல் கன்றை சதீஷின் தந்தையும் மற்றவற்றை விதைக்கலாமின் உறுப்பினர்களும் ஒவ்வொன்றாய் வைக்க இறுதி கன்றை நண்பர் சதீஷ் வைத்து நிகழ்வை சிறப்பித்தார் .. நீண்ட நாளைக்கு பிறகு நிகழ்வில் நண்பர் திரு . சாந்தகுமார் அவர்களும் கலந்துகொண்டது மகிழ்ச்சியை தந்தது ( புது மாப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்ககது )கூட்டத்தில் எங்களுடைய மணி சாரின் தீவிர முயற்சியில் புதுகை பாரத ஸ்டேட் தலைமை வங்கி அமைப்பிற்கு ரூ . 4000/- வழங்கியிருப்பதாக கூறி தொகையை அளித்தார் .. விதைக்கலாம் சார்பில் புதுகை பாரத ஸ்டேட் தலைமை வங்கிக்கும் அதன் முதன்மை மேலாளர் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .. நன்றி மணி அப்பா ...அடுத்த வார நிகழ்வு எங்கள் எல்லைபட்டி அம்மன் தேநீர் விடுதியை நோக்கி ...

இதுவரை ...
நிகழ்வு                                       - ௩௯ (39)
நட்ட கன்றுகள்                               - ௪௩௧ (431)
இந்தவாரம் பார்வையிடப்பட்ட இடம்  - ஏ. மாத்தூர்
திருப்பி மாற்றவேண்டியது           - ௧

நன்றி தொடர்வோம் நண்பர்களே ....

Friday, May 20, 2016

விதைக்KALAM அமைப்பு சகோதரர்களுக்கு, வணக்கம். 39-ம் பயண அழைப்பு நாளை (22-5-2016) காலை 5.30 மணியளவில் நமது 39-ம் பயணத்தில் 5 மரக்கன்றுகளை காமராஜபுரம் DRR வீதி முக்கம் அருகில் நட இருக்கிறோம். இந்த நிகழ்வில் நம் அமைப்புகுழுவினர் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கின்றோம். கூடும் இடம் : இம்பாலா ஹோட்டல் மேலும் விபரங்களுக்கு www.vithaikkalam.blogspot.in இப்படிக்கு விதைக்KALAM அமைப்பினர். நன்றி.

Wednesday, May 18, 2016

விதைக்கலாமின் 38 - ஆவது நிகழ்வு புதுக்கோட்டை பூங்கா நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது .. 

நிகழ்வில் மதிப்புமிகு பிரபல  பதிவர் அய்யா . திரு . வெங்கட் நாகராஜ் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பு செய்தார்கள்  .. மிக்க நன்றி அய்யா .. 

இந்த நிகழ்விற்கு அய்யா வந்ததற்கு இரண்டு காரணங்கள்.. முதல் காரணம் மறந்த நம் அண்ணன் வைகறையின் மகன் கல்வி நிதிக்காக திரு . வெங்கட் நாகராஜ் அவர்களின் மகளுடைய சேமிப்பிலிருந்து கனிச  தொகையை வீதி அமைப்பிடம் தருவதற்காக வந்திருந்தார் ...தொகையை கீதா அம்மா அவர்களோடு விதைக்கலாமும் சேர்ந்து பெற்றுக்கொண்டது ...  கீதா அம்மாவின் வரிகளிலிருந்து 

"ஒரு சிறுபிள்ளை இன்னொரு சிறுபிள்ளையின் துயரம் உணர்ந்து என்று உதவி செய்ய முன்வந்ததோ இந்த நாடு நல்ல நிலைக்கு செல்லவிருக்கிறது" 


நிச்சயம் நடக்கும் அம்மா ...அய்யா அவர்களுக்கும் அவரது மகளுக்கும் விதைகலாமின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் ...

மேலும் அமைபிற்கு என்றும் நல்ல உந்துதல்களையும் ஊக்கத்தையும் வழங்கி எங்களை எப்பொழுதும் வழிநடத்திகொண்டிருக்கும் திருமிகு . முத்துநிலவன் அய்யா அவர்கள் தன்னுடைய பிறந்தநாளை விதைக்கலாமோடு கொண்டாடும் விதமாக அமைபிற்கு ரூ.1000 வழங்கினார்கள்.. அதை கீதா அம்மா மற்றும் செல்வகுமார் அண்ணா ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது .. ( விதைகலாமின் முதல் நிதியாளரும் அய்யாதான் .. குறிப்பு : இதுக்கும் மேல சொன்னா அய்யாகிட்ட  திட்டுவாங்கனும் ) .. அடுத்த நிகழ்விற்கு அய்யா வருவதாகவும் கூறியிருக்கிறார் ...( இனி நீங்களும் பிறந்தநாளை அய்யவைபோல் விதைக்கலாமோடு கொண்டாடலாமே !!!)


இந்த வார நிகழ்வில் இன்னும் கூடுதல் சிறப்பாக மூன்று புதிய நண்பர்கள் முறையே திருமிகு. சாதிக் அய்யா , ஜாபார் அய்யா மற்றும் செல்வன் . ஸ்ரீராம் புதிதாக அமைப்பில் இணைந்துள்ளார்கள் ..

38- ஆம் நிகழ்வு ஒரு பிறந்தநாள் நிகழ்வும்கூட ... நம் அருமை நண்பர் திருமிகு . சிவா ஜி ( செல்லமா பேபி ) அவர்களுக்கு  பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .. இவரைப்பற்றி விதைக்கலாம் தொடர் பதிவில் என்னுடைய வலைப்பூவில் எழுத இருக்கிறேன் ... ( தன் பிறந்தநாளில் வைகறை அண்ணாவுக்காக ரூ . 5௦௦- ஐ  கீதா அம்மாவிடம் வழங்கினார் )

மேலும் நிகழ்வை ஏற்பாடு செய்துகொடுத்த அப்பா மணி சார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அய்யா குமாரசாமி அவர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் ...

இதுவரை ....

நிகழ்வு : 38

நட்ட கன்றுகளின் எண்ணிக்கை : 425

மேற்பார்வையிட்ட இடங்கள்  : 10
(திருமிகு . சிவா மற்றும் ஸ்ரீராம் மரம் நட்ட போது)(விதைக்கலாம் புலோ அப் )


( திருமிகு . நிலவன் அய்யாவின் நிதியை கீதா அம்மாவிடமிருந்து பெற்றபோது )


(விதைக்கலாம் என்ஜாய்மென்ட் பகுதி )( முதல் பார்வையிடல் )


(திருமிகு . சாதிக் அய்யா அவர்கள் )


(படம் - ௨)


(திருமிகு . ஜாபர் அய்யா அவர்கள் )


(திருமிகு . குமாரசாமி அய்யா அவர்கள் )


(கேக் வெட்டுதல் )


பிரபல  பதிவர் அய்யா . திரு . வெங்கட் நாகராஜ் அவர்கள் )

PC : எங்கள் அன்பு கஸ்தூரிரங்கன் அய்யா 

அடுத்த பயணம் காமராஜபுரம் நோக்கி .....Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Popular Posts