FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Sunday, November 22, 2015

விதைக்KALAM: விதைக்கலாம் அமைப்பின் 13ம் நிகழ்வு:     22/11/2015 இன்று காலை ஆறரை மணிக்கு விதைக்கலாம் இயக்கத்தின் பயணம் துவங்கியது. மழை மீண்டும் வலுக்க வேறு வழியே இல்லாமல் ராயல் பேக்ஸில...
 

  22/11/2015 இன்று காலை ஆறரை மணிக்கு விதைக்கலாம் இயக்கத்தின் பயணம் துவங்கியது. மழை மீண்டும் வலுக்க வேறு வழியே இல்லாமல் ராயல் பேக்ஸில் முடங்கினோம். சிறிது நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு. 

   Balaji அண்ணே மண்வெட்டி பிடி கழண்டுவிட்டது. இங்கே நல்ல மழை என்ன செய்யலாம். 

     கார்த்தியும் வீரமாத்தி சுரேஷ் அவர்களும் ஏதும் மழை பாதுகாப்பு உடையில் வராததால் இபு அவனது மைக்ராவில் அவர்களை அழைத்துவர நாங்கள் கூண்டுகளை எடுத்துக்கொண்டு திருநகருக்கு புறப்பட்டோம். 

   மேட்டுப்பட்டி அருகே இருக்கும் திருநகரின் சமுதாயக் கூடத்தின் அருகே பத்து கன்றுகளை நடத் திட்டம். அங்கே ஒரு குழு ஏற்கனவே பணியில் இருந்தது. பாக்கியராஜ், பாலாஜி மற்றும் ஸ்ரீதர்! சார் இப்படி மழை பேயுதே கன்றுகள் பிழைக்குமா என்று கவலையோடு கேட்டது அந்தக் குழு. நிகழ்வை நடத்த முடியுமா என்று கேள்விகள் எழுந்தன. வேலை துவங்கியவுடன் அந்தச் சந்தேகங்கள் பறந்து எட்டரை மணிக்குள் ஆறு கன்றுகளை நட்டது குழு! 

   தீபாவளி வணிகத்திற்கு பிறகு முதல் முதலாக மீண்டும் இயக்கத்தில் இணைந்த வீரமாத்தி சுரேஷ் பணியினை பெரு மகிழ்வுடன் செய்தார். அவருக்கு ஒரு ஸ்பெசல் நன்றி. 

   நிகழ்வின் நடுவே அலைபேசியில் அழைத்து வாழ்த்திய ஆசிரியர் சோம சுந்தரம் அவர்களுக்கும் நன்றிகள். இத்துடன் மொத்தம் நூற்றி தொண்ணூற்றி ஒரு கன்றுகள் என்று கருதுகிறேன். இயக்க உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

     அடுத்த நிகழ்வு வள்ளலார் இல்லம் ஏ.மாத்தூர்.

  29/11/2015 காலை ஆறுமணிக்கு இம்பாலா உணவகம் எதிரே இருந்து பயணத்தை துவக்கிறோம். பசுமை நேசர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 

அனைவரும் வருக.





Tuesday, November 17, 2015



  நமது அமைப்பின் 12ம் நிகழ்வு பயணம் பனையப்பட்டி SMMAR அலமேலு அருணாச்சலம் உயர்நிலைப்பள்ளி நோக்கி சென்றோம். அங்கே மாணிக்கம் அய்யா மற்றும் சண்முகம் அய்யா இருவரும் மரக்கன்று நடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். அவர்களுக்கு அமைப்பின் சார்பில் நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.

  காலை 7.00 மணியளவில் பயணம் துவங்கியது. 5.00 மணியளவில் இருந்தே சரியான மழை. இதற்குத்தானே அனைத்தும் என்று ஒருபுறம் மகிழ்வாய் இருந்தாலும், என்ன செய்யப்போகிறோம் என்ற பதற்றமே மிஞ்சியிருந்தது.

  சரியாக 6.00 மணியளவில் கஸ்தூரி அய்யா இரு மகிழுந்துகளை தயார் செய்தார். அதில் நமது உறுப்பினர் கார்த்தி அய்யா அவர்களின் மகிழுந்தும் ஒன்று.இன்னுமொரு மகிழுந்து அவருடைய சகோதரியுடையது என்றார். இவர்கள் இருவருக்கும் அமைப்பின் சார்பில் நன்றிகள்.

  காலை 7.30 மணியளவில் பள்ளி வளாகத்திற்குள் 5 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதற்கு அனுமதி அளித்த தலைமையாசிரியர் உட்பட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள். இதுவரை விதைக்கலாம் அமைப்பின் மூலமாக சுமார் 183 மரக்கன்றுகள் விதைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறோம்.

  நமது அமைப்பின் 13ம் பயணத்தில் திருநகர் பகுதிக்கு செல்லவிருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம்.

நன்றி.

Wednesday, November 11, 2015


                           விதைக்கலாம் அமைப்பின் 11ம் நிகழ்வு சமஸ்கிருத ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
                          
                           அன்று காலை 7 மணியளவில் அமைப்பு சகோதரர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டது.
                          
                           இதில் சிறப்பு அழைப்பாளராக திரு. சபா ரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை மற்றும் சில அறிவுரைகள் சொன்னார்.
                          
                           மேலும் தலைமையாசிரியர் திரு சேகர் அவர்களும், அறிவியல் ஆசிரியர் திரு ராமச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
                          
                           அன்று வளாகத்தில் 5 மர கன்றுகள் நடப்பட்டு அதற்கு கூண்டுகளும் பொருத்தப்பட்ட்து.

                          
பங்குபெற்றவர்கள் :
                          
                           மணிசங்கரன் சார், சபா ரத்தினம், கஸ்துரி ரங்கன், ராமசந்திரன், சேகர், சந்தோஷ்,ராமலிங்கம், நாகநாதன், பாக்கியராஜ், காசிப்பாண்டி, ஸ்ரீ மலையப்பன், UK கார்த்திகேயன்.


நாள்: 1/11/2015 காலை :7.30 மணியளவில்
இடம்: வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளி
சிறப்பு அழைப்பினர்கள்:
திரு. Y. ஜெயராஜ் தலைமையாசிரியர், வயலோகம் அரசினர் மேல்நிலைப்பள்ளி
திரு. A.கோபாலகிருஷ்ணன் இரவு காவலர், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி
திரு. V.கவியரசன் மாணவர், அரசு மேல்நிலைப்பள்ளி
திரு. R.பாஸ்கர் கணக்காளர், வீரமாத்தி சுரேஷ்

நோக்கம்:
மரக்கன்றுகள் = 12 நடப்பட்டது
கூண்டுகள்= 10 பொருத்தப்பட்டது

பேசப்பட்டவை:
மழைகாலங்களில் அமைப்பின் சார்பின் வாங்க ஆலோசிக்கப்படுகிறது.
அடுத்த இடம் ஓரியண்டல் பள்ளி தேர்வு நன்றி தெரிவிப்பு திரு.காசிபாண்டி அமைப்பு உறுப்பினர்

நன்றி:கார் உதவி

நாகநாதன் கார்த்திக் வீரமாத்தி சுரேஷ் இப்ராஹீம்

பள்ளித் தலைமை ஆசிரியர் அய்யா ஜெயராஜ் அவர்கள் அமைப்பிற்கு ரூ.2000 வழங்கி சிறப்பித்தார்.

இன்று (25/10/15) விதைக்கலாமின் ஒன்பதாவது நிகழ்வு புதுக்கோட்டை காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அரங்கேறியது இம்முறை 19 கன்றுகள் நடப்பட திட்டமிடப்பட்டு, அதற்கான குழிகள் அனைத்தும் அப்பள்ளியின் மூலமே அமைக்கபட்டுயிருந்தது கூண்டுகளும் பள்ளியின் மூலமாகமே பெறப்பட்டிருந்தது. கன்றுகள் அனைத்தும் விதைக்கலாமின் அமைப்பை சேர்ந்தவர்களால் அரி மளதிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்தது. நிகழ்வு காலை 6.15 மணிக்கு தொடங்கியது முதல் கன்றை பள்ளி மாணவன் மூலமாக நடப்பட்டு, மேற்பட்ட கன்றுகள் அனைத்தும் அமைப்பை சேர்ந்தவர்களால் சீராகவும் நேர்த்தியாகவும் நடப்பட்டது. நிகழ்விற்கு ஏற்பாடு செய்த விதைக்கலாம் அமைப்பின் உறுப்பினர் சாந்தகுமார் அவர்களுக்கும், பள்ளித்தலைமயாசிரியர் ராஜு அய்யா அவர்களுக்கும், 20 கன்றுகளுக்கும் கூண்டுகள் மற்றும் குழிகள் அமைத்துதந்த கண்ணன் அய்யா அவர்களுக்கும் அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகள். நிகழ்வில் ராமலிங்கம், இளவரசன், முகுந்தன், மாணவர்கள் சஞ்சய், நிஷா, சௌந்தர்யா, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ஷீலா, சந்தோஷ், பாக்கியராஜ், கஸ்தூரி ரெங்கன், பாண்டியன், அப்துல் ஜலில், மணி சார், காசிப்பாண்டி, UK கார்த்திகேயன், பிரபாகரன், ஸ்ரீதரன், வீரமாத்தி சுரேஷ், நாகநாதன், நாகபாலாஜி, ஸ்ரீமலையப்பன், வசந்தா, ராணி ரமாதேவி, ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Saturday, November 07, 2015

இன்று 15-10-2015 மறைந்த மேதகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஆ.பெ.ஜ அப்துல் கலாம் அய்யா அவர்களின் 85- வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக கிள்ளனூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள பூவன்குலத்தில் 85 மறக்கன்றுகள் நடுவதாக முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கிள்ளனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமிகு.ச. கோவிந்தசாமி அய்யா அவர்களின் மகன் திருமிகு சோ. சின்னப்பா மற்றும் ஊர் மக்களின் உதவியினால் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. 85 கன்றுக்கான குழிகள் அனைத்தும் ஊர் மக்களால் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு தாயார் நிலையில் இருந்தது. மரக்கன்றுகள் அனைத்தும் கிராம மக்காளால் பெறப்பட்டிருந்தது. மேலும் கன்றுகளுக்கான கூண்டுகள் அனைத்தும் விதைக்காலம் அமைப்பின் மூலம் அளிக்கப்பட்டது. மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக கவிஞர். திருமிகு. முத்துநிலவன் அய்யா அவர்களும், திருமிகு. பொன். கருப்பையா அய்யா அவர்களும் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர். நிகழ்வின் முதல் கன்றை ஊராட்சி மன்ற தலைவர் அய்யா அவர்களால் நடப்பட்டது. இரண்டாவது கன்று நிலவன் அய்யா அவர்களாலும், மூன்றாவது கன்று பொன். க அய்யா அவர்களாலும் மற்றும் விதைக்கலாமில் பங்குபெற்ற அணைத்து உறுப்பினர்களாலும் மற்றும் ஊர் பொதுமக்களாலும் நடப்பட்டது. மேலும் சிறப்பாக இன்றைய நிகழ்வின் 54 – வது கன்றானது விதைக்காலாம் அமைப்பின் 100 – வது கன்று என்பதை பெருமகிழ்ச்சியுடன் அமைப்பின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். 85 கன்றுகள் சிறப்பான முறையில் நடப்பட்டு மேதகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஆ.ப.ஜ அப்துல் கலாம் அய்யா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. நிகழ்வில் திருமிகு வீரகுமார், வீரமாத்தி சுரேஷ், கனகமணி, அழகுராஜ், பாண்டியன், நாகராஜன், மூர்த்தி, அப்துல் ஜலில், நடராஜன், பால்ராஜ், சக்திவேல், கோபால், செல்லையா, காந்திநாதன், பிச்சை, மணி, ராமையா, கனகராஜ், ராமதாஸ், UK கார்த்திகேயன், முகுந்தன், மணி சங்கரன், கஸ்துரி ரெங்கன், நாகபாலாஜி, ஸ்ரீமலையப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர். எட்டாம் நிகழ்வு மாந்தாங்குடி MA பால் பண்ணையில் நடைபெறும் என்பது அமைப்பினருக்கு தெரிவிக்கப்பட்டது.


விதைக்கலாம் அமைப்பின் ஏழாம் நிகழ்வில் இன்று (11-10-2015) கம்பன் நகரில் திரு. எஸ். வெங்கடசுப்ரமணியன் அய்யா அவர்களின் வீட்டின் முன்பாக 5 மரங்கள் நடப்பட்டன. அவருடைய துணைவியார் மற்றும் அவருடைய மகன் செல்வன். சுப்பிரமணியன் கிரி ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பாக நடத்த உதவி புரிந்தனர். அவர்களுக்கு அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
அதன்பின் நம்முடைய அமைப்பின் சிறப்பு நிகழ்வாக வலைபதிவர் சந்திப்பு திருவிழா 2015 முன்னிட்டு நிகழ்சி நடைபெறும் இடமான ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தின் பின்புறமுள்ள தேவாலயத்தில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த சிறப்பு நிகழ்விற்கு ஏற்பாடு செய்து விதைக்க்கலாமிற்கு வாய்ப்பு வழங்கிய திருமிகு. முத்துநிலவன் அவர்களுக்கும் ஏனைய வலைப்பதிவர் சந்திப்பு குழுவிற்கும், வலைப்பதிவர் நிகழ்விற்கு வருகை தந்து விதைக்கலாமை முதல் நிகழ்வாக ஏற்படுத்தி தந்த அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வலைபதிவர்களுக்கும் ஏனைய நல்ல உள்ளங்களுக்கும் விதைக்கலாம் அமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்துகொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
நிகழ்வில் விதைக்கலாம் உறுப்பினர்கள் சந்தோஷ், பாக்கியராஜ், கஸ்தூரி ரெங்கன், பாண்டியன், அப்துல் ஜலில், மணி சார், காசிப்பாண்டி, UK கார்த்திகேயன், பிரபாகரன், ஸ்ரீதரன், வீரமாத்தி சுரேஷ், நாகநாதன், பழ. சுகந்தராஜன், நாகபாலாஜி, ஸ்ரீமலையப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதற்கடுத்த சிறப்பு நிகழ்வு கிள்ளனூரில் நடைபெருவதைப்பற்றி அமைப்பினருக்கு தெரிவிக்கப்பட்டது.
Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Popular Posts