FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Sunday, September 27, 2015

இன்றைய ஐந்தாம் பயணம் இனிதே நிறைவடைந்தது. வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இன்றைய முக்கிய நிகழ்வாக கிள்ளனுர் ஊராட்சி தலைவரின் கோரிக்கையான 85 மர கன்றுகள் நட வேண்டும் என்ற வேண்டுதலை நமது அமைப்பு மிக்க மகிழ்ச்சியுடன் பரிசீலிக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம். மேலும் நமது அமைப்பின் உறுப்பினரான அய்யா திரு. மணி சங்கர் அவர்கள் இன்று ருபாய் 5000 நன்கொடையாக நமது அமைப்பிற்கு அளித்தார். அதற்க்கு அமைப்பு, அய்யா அவர்களுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறது. விதைக்கலாம் பணி சிறக்க ஒன்றுகூடுவோம் வென்று கட்டுவோம்.

\



Sunday, September 20, 2015

நான்காம் நிகழ்வு:

                            விதைக்கலாம் அமைப்பின் நான்காம் நிகழ்வு இன்று (20-09-2015) இனிதே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சந்தைபேட்டை- புதுக்கோட்டையில் நிறைவுபெற்றிருக்கிறது.இன்றைய நிகழ்வில் 3 கன்றுகளும் இரண்டு போத்துகளும் நடப்பட்டன. நிகழ்விற்கு ஏற்பாடு செய்து தந்த கவிஞர்.கீதா அம்மா அவர்களுக்கு நன்றிகள் .

                           நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக  சுரபி அறக்கட்டளை நிறுவனத்தார் திரு. சேதுமுதுராஜ், திரு. குமார், திரு. ஸ்டாலின், திருமதி. ஜெகதீஸ்வரி ஆகியோர் பங்குபெற்று நிகழ்வினை சிறப்பு செய்தனர். இன்றைய  முதல் கன்று இவர்கள் மூலம் நடப்பட்டது .... சுரபி பற்றி சில வரிகள்

                             மதுரை வீதிகளில் 165 மனநலமற்றோர் இருக்கிறார்கள்,
கடந்த சில ஆண்டுகளாக இரண்டு இளைஞர்கள் இவர்களுக்கு ஒருவேளை உணவை வழங்கி வருகிறர்கள்  சேதுமுத்துராஜ் மற்றும் குமார் என்கிற இளைஞர்கள் இருவரும் உணவினைச் சமைத்து எடுத்துக்கொண்டு காலைவேளையில் மதுரை நகரில் தெருக்களில் இருக்கும் மனநலமற்ற மனிதர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.


                        காலை உணவிற்கு பின்னர் இவர்கள் எங்காவது சென்றுவிட்டு பின்னர் புறப்பட்ட இடத்திற்கே வரும் பழக்கத்தில் இருப்பதால் காலை ஒருவேளை மட்டுமே உணவு வழங்க முடிகிறது என்றும் விளக்கினார்கள்.

                        ஆசிரியர் பயிற்சிக்குப் பிறகு, ஆண் செவிலியர் பயிற்சியும் முடித்த திரு.சேது இவர்களில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சையும் அளித்துவருகிறார்.
அதிகாலை மூன்றுமணிக்கு எழு்ந்து சமைக்கும் குமார் சுரபிக்கு கிடைத்த பரிசு.
பாரதி சொல்லும் ஒரு வரிதான் நினைவில் எழுகிறது
                                  ஊருக்கு உழைத்திடல் யோகம்
                                  அது எல்லோருக்கும் அமையாது

                       சுரபியின் ஒரு நாள் செலவு 3800 ரூபாய்கள்,ஒரு மாத செலவு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள்! மதுரையின் பலபகுதிகளில் இருக்கும் சந்தை வியாபாரிகள் சுரபி பற்றி அறிந்து ஒரு கிலோவிற்காண விலையில் மூன்று கிலோ காய்கறிகளை தந்து வருகிறார்கள். அந்த எளிய விவசாய மனிதர்கள் உண்மையில் எவ்வளவு பெரியவர்கள்.

                  சில மளிகைக்கடைகள் இவர்களுக்கு பொருட்களை இலவசமாகவோ குறைந்த விலைக்கோ தருவதால் சுரபி தொடர்ந்து செயல்படுகிறது. இப்படி எளிய மனிதர்களின் பங்களிப்போடு தொடர்ந்து வருகிறது சுரபி தனது சேவையினை..... ( சுரபி வரலாறு  கஸ்தூரி ரங்கன்அய்யாவின் முகநூல் பக்கத்திலிருந்து)

                அடுத்ததாக அமைப்பிற்கு சட்ட ஆலோசனை வழங்க வேண்டி மதுரை உயர்நீதிமன்ற கிளையிலிருந்து திரு. பரஞ்சோதி (வழக்கறிஞர்)  அவர்கள் வருகை தந்து தகுந்த ஆலோசனைகளை வழங்கி சென்றுள்ளார்கள்.

               புதிய உறுபினர்களாக திரு. வீரமாத்தி சுரேஷ் அய்யா மற்றும்  சுகந்தன் அய்யா ஆகியோர் இணைந்தனர்.

            சுரபி அறக்கட்டளைக்கு விதைக்கலாம் அமைப்பினரால்  ரூ.4200 நன்கொடை வழங்கப்பட்டது. அமைப்பின் மூத்த உறுப்பினர் திரு மணி சங்கரன் அய்யா வழங்க திரு. சேது அவர்கள் அதை பெற்றுக்கொண்டார்.

          விதைக்கலாம் அமைப்பின் உறுப்பினர் திரு. சந்தோஷ் அவர்கள் ரூ. 800 அமைப்பிற்காக  வழங்கினார். அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

          இறுதியாக பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திரு. ரவிச்சந்திரன் அய்யா அவர்கள் நன்றி கூறினார்.
              
          

     










          
                                                                                       நன்றிகளுடன்,

                                                                     விதைக்KALAM அமைப்பினர்.
              

                          
                    

Sunday, September 13, 2015

                             
மூன்றாம் நிகழ்வு 


                        விதைக்கலாமின் மூன்றாம் நிகழ்வு இன்று (13-09-2015) புதுக்கோட்டை த.சு.லு.தி (TELC) மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. விதைக்கலாமின் அனைத்து உறுப்பினர்களும் நிகழ்வில் பங்குபெற்றனர். 

                              காலை 6.30 மணியளவில் நிகழ்வு தொடங்கியது, முதல் கன்றை  திரு. கிருபாகரன் அய்யா மற்றும் திரு சிவராஜா அய்யா இருவரும் இணைந்து நட்டனர் மற்ற கன்றுகளும் புதிதாக வந்த உறுப்பினர்களால் நடப்பட்டது. நிகழ்வில் புதிய உறுப்பினர்களாக திரு. அப்துல் ஜலில், திரு. நாகநாதன் மற்றும் திரு. முகமது இப்ராகிம் ஆகியோர் இணைந்தனர்.

          இந்த நிகழ்வைத் தொடர்ந்து விதைக்கலாமின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. 

                        திரு. காசிப்பாண்டி அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

                     கூட்டத்தின் முதல் நிகழ்வாக திரு. முத்துநிலவன் அய்யா அவர்கள் அமைப்பிற்காக ரூ. 1000 வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது ( அய்யா நிதி அளித்ததே மெய்சிலிர்க்க வைத்த  இனிப்பான சம்பவம். அதைப்பற்றி ஒரு பெரிய பதிவை பிறகு வெளியிடுகிறேன்). 

       கூட்டத்தில் அமைப்பை அங்கிகரிக்கப்பட்ட அமைப்பாக மாற்றுவதற்காக சட்ட ஆலோசனை  பெற அறிவுறுத்தப்பட்டது. 

                         மரக்கன்றுகளை இன்னும் எளிதாக பெற ஆலோசனை கேட்கப்பட்டது.

                          ஏற்கனவே நட்ட மறக்கன்றுகளைப்பற்றி நலம் விசாரிக்கப்பட்டது.

     அடுத்த நிகழ்விர்க்கான இடமாக அரசு மேல்நிலைப்பள்ளி சந்தைப்பேட்டை தெரிவுசெய்யப்பட்டது.

                           நிதி வரவு- செலவு பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

                   திரு. நாக பாலாஜி அவர்கள் 10 நிமிடங்கள் மியுடுவல் பண்ட்ஸ் பற்றி விளக்கமளித்தார்.
                          
                    திரு. கிருபாகரன் அய்யா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் 

                 திரு. முகமது இப்ராகிம் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவருக்கு திரு. மணிசங்கரன் அய்யா அவர்களின் கைகளால் ஒரு மரக்கன்று பரிசளிக்கப்பட்டது.
          
   25 மரக்கன்றுகளை  அமைப்பிற்காக வழங்கிய திரு. உதயகுமார் அய்யா (தோட்டக்கலைத்துறை) அவர்களுக்கு நன்றிகூறப்பட்டது.

                     இறுதியாக  திரு கஸ்தூரி ரெங்கன் அய்யா அவர்கள் நன்றி கூறினார்.

                   அமைப்பு உறுப்பினர் திரு. பாக்கியராஜ் அவர்களின் முயற்சியால் அமைப்பின் மூலமாக பீ  வெல் மருத்துவமனை முன்பாக  வைக்கப்பட்ட கன்றுகள் பார்வையிடப்பட்டது.


                                                                                                                                   









                                    

                                                                                                                                                              நன்றிகளுடன் 
                                                                                                                                           
                                                                                                                                         விதைக்KALAM அமைப்பினர் 

                                 

Monday, September 07, 2015

விதைக்கலாம் இரண்டாவது நிகழ்வு

வணக்கம்

          விதைக்கலாமின் முதல் பயணம் இலுப்பூரில் (30/08/15) தொடங்கி வெற்றி அடைந்ததை தொடர்ந்து தனது இரண்டாவது பயணத்துக்கு தயாரானது.

           அமைப்பின் இரண்டாவது நிகழ்வு எல்லைபட்டி அரசு
உயர் நிலைப்பள்ளியில் (06/09/15) அரங்கேறியது. மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் திரு.கஸ்தூரிரெங்கன் அய்யா (எல்லைபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்) மூலமாக தயார் செய்யப்பட்டு இருந்தது அதற்காக அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...

         காலை 6.30 மணிக்கு விதைக்கலாமின் அமைப்பை சேர்ந்த திரு.கஸ்தூரிரெங்கன் அய்யா,  திரு.கார்த்திகேயன்,  திரு.ஸ்ரீ மலையப்பன்,  திரு.பாக்கியராஜ் ,  திரு.நாக பாலாஜி ,  திரு.காசிபாண்டி ,  திரு.சாந்தகுமார் ,  திரு.இராமலிங்கம் ,  திரு.குணசேகரன் ,  திரு.முகுந்தன் ,  திரு.சந்தோஷ் ,  திரு.ஸ்ரீதரன் ஆகிய அனைவரும் எல்லைபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து தங்கள் முழு பங்களிப்பையும் அளித்தமைக்காக வாழ்த்துகளும் நன்றிகளும்.

          மேலும் இக்குழுவில் இவர்களுடன் இணைந்த திரு.சோமசுந்தரம் அய்யா,  திரு. ஐய்யர் மணி ஷங்கர் அய்யா , அவர்களுக்கும் அமைப்பின் சார்பாக வாழ்த்துகளும் நன்றிகளும்.

         அமைப்பின் இரண்டாவது நிகழ்வில் 6 மரக்கன்றுகள் நடப்பட்டது மேலும் மரக்கன்றுகள் அனைத்திற்கும் கூண்டுகளும் நிறுவப்பட்டது.

        நிகழ்விற்கான மரக்கன்றுகளை வழங்கிய திரு.ஸ்ரீ மலையப்பன் ,  திரு.சாந்தகுமார்  அவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும். நிகழ்விற்கான கூண்டுகளை வழங்கிய திரு.நாகபாலாஜி , திரு.ஸ்ரீதரன் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

        விதைக்கலாம் அமைப்பில் இந்த வாரம் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. திரு. சோமசுந்தரம் அய்யா அவர்களும் மற்றும் திரு. அய்யர் மணிசங்கரன் அய்யா அவர்களும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். குழுவில் அதம்னை பரிசிலித்து தக்க முடிவுகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த நிகழ்வு வரும் ஞாயிறு அன்று புதுக்கோட்டை டி.இ.எல்.சி மேல்நிலைப்பளியில் நந்திபெற உள்ளது. அந்த நிகழ்வில் பங்கேற்க அனைத்து நண்பர்களையும் இதன்மூலம் வரவேற்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்...


                                                                                           நன்றிகளுடன்
                                                                         விதைக்KALAM குழுவினர்

   













        

Wednesday, September 02, 2015

விதைக்கலாம் முதல் நிகழ்வு

வணக்கம் நண்பர்களே!
         நமது அமைப்பின் முதலாவது நிகழ்வு 30/08/2015(ஞாயிற்றுகிழமை) அன்று அரங்கேறியது. கலாமினால் ஒன்று திரண்ட அமைப்பின் நோக்கம் இனிதே துவங்கப்பட்டது.

         முதல் நிகழ்வு இலுப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரங்கேறியது. அமைப்பின் முதல் வாய்ப்பை தானாக முன்வந்து ஏற்றுக்கொண்ட திரு.காசிபாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

        முதல் நிகழ்வில் தங்கள் முழு ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் அளித்த திரு.கஸ்தூரிரெங்கன்  அய்யா , திரு.காசிபாண்டி , திரு.கார்த்திகேயன், திரு.ஸ்ரீமலையப்பன், திரு.பாக்கியராஜ், திரு.பிரபாகரன், திரு.நாகபாலாஜி ஆகிய அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

       அமைப்பின் முதல் நிகழ்வில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் மரக்கன்று அனைத்திற்கும் கூண்டுகளும் நிறுவப்பட்டது.

      மரக்கன்றுகள் அனைத்தும் காலை 8.30 மணிக்குள் நடப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது. அனைவர் மனதிலும் அமைப்பு துவக்கப்பட்ட மகிழ்ச்சி துளிர்விட்டது.

     நிகழ்விர்க்கான பேனரையும் மற்றும் மரக்கன்றுகளையும் ஏற்பாடு செய்துகொடுத்த திரு. ராமலிங்கம் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும். பேனரை வரைந்து கொடுத்த திரு பன்னீர்செல்வம் அய்யா அவர்களுக்கு நன்றிகள்...

    முதல் நிகழ்விற்கு இடமளித்த பள்ளி தலைமையாசிரியர் அவர்களுக்கு நன்றிகள்.  அடுத்த நிகழ்விற்கான இடம் முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. நிகழ்வில் சிற்சில காரணங்களால்  கலந்துகொள்ள முடியாமல் இருந்தாலும் இந்த அமைப்பிற்கு ஊன்றுகோல்கலாய்  இருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் இல்லாமல் இது சாத்தியப்படவில்லை...

                                                                                                  நன்றிகளுடன்,
                                                                                      விதைக்KALAM குழுவினர்.

                                                                                                           

       










Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Popular Posts