ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு விதைக்கலாம் ப்ளாக்கில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இனி முடிந்தவரை விதைக்கலாம் ப்ளாக் அவ்வபோது அப்டேட் செய்யப்படும் என நம்புவோமாக. இனி வரும் காலங்களில் இந்த தளமானது விதைக்கலாம் நிகழ்வுகள் பற்றியே பதிவு மட்டும் இன்றி பல பயனுள்ள தகவல்களையும் இதன் மூலம் பதிவு செய்யலாம் என்று எண்ணம்.
கடந்தவாரம் மரம் நடும் நிகழ்வு , மனவிடுதி அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. எப்போதும் போலவே நமது விதைக்கலாம் அமைப்பினர் அதிகாலை துயில் கலைத்து களம் நோக்கி புறப்பட்டு குறிப்பிட்ட அந்த பகுதியை அடையும்போது , குளுமையான பனி நீங்கி சூரியன் சுட்டு எரிக்க தயாராக இருந்தார். பள்ளியை அடையும்போது , அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் எங்களுக்காக காத்திருந்தனர் .
ரொம்பவே மகிழ்ச்சியான விஷயம் என்னவெனில் அந்த பள்ளி மாணவர்கள் தன்னார்வத்தோடு இந்த மரம் நடு நிகழ்வுக்கு தேவையான பெரும்பான்மையான வேலைய செய்து தயார் நிலையில் வைத்தது தான். பின் மனவிடுதி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் முதல் மரக்கன்றை நட தொடர்சியாக மூன்று மரக்கன்றுகள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும், ஊர் பெரியவர்களால் நடப்பட்டது. இந்த நிகழ்வு நடந்து கொண்டு இருக்கும்போது அந்த வழியாக வந்திருந்த முன்னாள் மத்திய அமைச்சர் திரு.ரகுபதி அவர்கள் தன்னார்வ அடிப்படையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது .
மனவிடுதி அரசு பள்ளி தலைமையாசிரியர் அவர்கள், நம் அமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி தேநீர் விருந்து அளித்து உபசரித்தார். அவருக்கு இந்த இடத்தில் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறோம்.
இந்த நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த அனைத்து நண்பர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இவ்விடத்தில் நன்றியை சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சி.
வாருங்கள் தொடர்ந்து விதைkalam..
Arumai...thodarungal Shiva "JI"
ReplyDelete