விதைக்கலாம் இரண்டாவது நிகழ்வு
வணக்கம்
விதைக்கலாமின் முதல் பயணம் இலுப்பூரில் (30/08/15) தொடங்கி வெற்றி அடைந்ததை தொடர்ந்து தனது இரண்டாவது பயணத்துக்கு தயாரானது.
அமைப்பின் இரண்டாவது நிகழ்வு எல்லைபட்டி அரசு
உயர் நிலைப்பள்ளியில் (06/09/15) அரங்கேறியது. மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் திரு.கஸ்தூரிரெங்கன் அய்யா (எல்லைபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்) மூலமாக தயார் செய்யப்பட்டு இருந்தது அதற்காக அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்...
காலை 6.30 மணிக்கு விதைக்கலாமின் அமைப்பை சேர்ந்த திரு.கஸ்தூரிரெங்கன் அய்யா, திரு.கார்த்திகேயன், திரு.ஸ்ரீ மலையப்பன், திரு.பாக்கியராஜ் , திரு.நாக பாலாஜி , திரு.காசிபாண்டி , திரு.சாந்தகுமார் , திரு.இராமலிங்கம் , திரு.குணசேகரன் , திரு.முகுந்தன் , திரு.சந்தோஷ் , திரு.ஸ்ரீதரன் ஆகிய அனைவரும் எல்லைபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வருகை தந்து தங்கள் முழு பங்களிப்பையும் அளித்தமைக்காக வாழ்த்துகளும் நன்றிகளும்.
மேலும் இக்குழுவில் இவர்களுடன் இணைந்த திரு.சோமசுந்தரம் அய்யா, திரு. ஐய்யர் மணி ஷங்கர் அய்யா , அவர்களுக்கும் அமைப்பின் சார்பாக வாழ்த்துகளும் நன்றிகளும்.
அமைப்பின் இரண்டாவது நிகழ்வில் 6 மரக்கன்றுகள் நடப்பட்டது மேலும் மரக்கன்றுகள் அனைத்திற்கும் கூண்டுகளும் நிறுவப்பட்டது.
நிகழ்விற்கான மரக்கன்றுகளை வழங்கிய திரு.ஸ்ரீ மலையப்பன் , திரு.சாந்தகுமார் அவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும். நிகழ்விற்கான கூண்டுகளை வழங்கிய திரு.நாகபாலாஜி , திரு.ஸ்ரீதரன் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
விதைக்கலாம் அமைப்பில் இந்த வாரம் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. திரு. சோமசுந்தரம் அய்யா அவர்களும் மற்றும் திரு. அய்யர் மணிசங்கரன் அய்யா அவர்களும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். குழுவில் அதம்னை பரிசிலித்து தக்க முடிவுகளை எடுக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த நிகழ்வு வரும் ஞாயிறு அன்று புதுக்கோட்டை டி.இ.எல்.சி மேல்நிலைப்பளியில் நந்திபெற உள்ளது. அந்த நிகழ்வில் பங்கேற்க அனைத்து நண்பர்களையும் இதன்மூலம் வரவேற்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்...
நன்றிகளுடன்
விதைக்KALAM குழுவினர்
அனைவருக்கும் வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி அய்யா...
Deleteநன்றிகள் அய்யா
Delete“இளைஞர்கள் பொறுப்பற்றவர்கள், விட்டேத்திகளாகத் திரிவார்கள்...“ எனும் நமது இந்தியத் தமிழ்ச் சமூகத்தின் பொதுப்புத்தியில் ஓங்கி அறைந்து, எளிமையாகவும் அதே நேரம் வலிமையாகவும் அரும்பணி ஒன்றைத் தொடங்கியிருக்கும் எங்கள் புதுக்கோட்டையின் இளைய நண்பர்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கம். உதவிகள் செய்யக் காத்திருக்கிறேன். அவ்வப்போது உரிமையோடு கேட்கலாம்.
ReplyDeleteஒரே ஒரு வேண்டுகோள் - சமூகப் பார்வையில் சரியாக இருக்கும் என் இளைய தம்பிகள் மொழிப்பார்வையிலும் முழுமையாக இருக்க வேண்டும் எனும் நியாயமான உணர்வோடு (கட்டிய வீட்டுக்கு நொட்டாங்கு சொ்ல்லும் துர்ப்புத்திக்காரனாக நினைக்காமல் உங் களோடு பயணிக்க நினைக்கும் மூத்த தோழனின் வேண்டுகோளாக நினைத்துச் செவிமடுங்கள்)
அற்புதமான பணி...
அருமையான பெயர்.. ஆனால் அதில் எதற்கு இரட்டை மொழி?
அதையே “விதை-கலாம்“ என்று போட்டுப் பாருங்கள்.
பொருளும் சரியாகவே கிடைக்கும், மொழியுடன்புதுமையாகவும் இருக்கும். சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன். அன்றென்று தோன்றினால் விட்டுவிடுங்கள். நன்றி.
குழுவினர் கவனத்திற்கு
Deleteஅதென்ன மூத்த தோழன்
Deleteஎன்றும் இளைஞர் அல்லவா நீங்கள்...
விதைக் கலாம்
Deleteவிதைக் களம்
விதைக் KALAAM
எப்படி சொன்னாலும்
க'விதை'யாகவே தோன்றுகிறது
வலைப்பதிவர் சந்திப்பின்போது தங்கள் குழுவை சந்திக்க ஆவலுடன் உள்ளேன்.நன்றி
சகாஸ்!!! இந்த அமைப்புக்கு கிடைத்த அருமையான அங்கீகாரம் http://engalblog.blogspot.com/2015/09/blog-post_12.html?showComment=1442047462095#c7888743607159980744 இந்த லிங்க் கை பாருங்கள்!! இந்தவாரம் பாசிடிவ் பக்கத்தில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்! உங்கள் அரும்பணிக்கு வணக்கங்கள்!
ReplyDelete