FLASH NEWS

விதைக்கலாம் அமைப்பின் 150ம் நிகழ்வு 08-07-2018 (ஞாயிற்றுகிழமை) காலை 06.00 மணியளவில் 25 மரக்கன்றுகளை அய்யனார் திடல் அருகில் நட இருக்கிறோம் அனைவரும் வருக

Sunday, September 20, 2015

நான்காம் நிகழ்வு:

                            விதைக்கலாம் அமைப்பின் நான்காம் நிகழ்வு இன்று (20-09-2015) இனிதே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சந்தைபேட்டை- புதுக்கோட்டையில் நிறைவுபெற்றிருக்கிறது.இன்றைய நிகழ்வில் 3 கன்றுகளும் இரண்டு போத்துகளும் நடப்பட்டன. நிகழ்விற்கு ஏற்பாடு செய்து தந்த கவிஞர்.கீதா அம்மா அவர்களுக்கு நன்றிகள் .

                           நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக  சுரபி அறக்கட்டளை நிறுவனத்தார் திரு. சேதுமுதுராஜ், திரு. குமார், திரு. ஸ்டாலின், திருமதி. ஜெகதீஸ்வரி ஆகியோர் பங்குபெற்று நிகழ்வினை சிறப்பு செய்தனர். இன்றைய  முதல் கன்று இவர்கள் மூலம் நடப்பட்டது .... சுரபி பற்றி சில வரிகள்

                             மதுரை வீதிகளில் 165 மனநலமற்றோர் இருக்கிறார்கள்,
கடந்த சில ஆண்டுகளாக இரண்டு இளைஞர்கள் இவர்களுக்கு ஒருவேளை உணவை வழங்கி வருகிறர்கள்  சேதுமுத்துராஜ் மற்றும் குமார் என்கிற இளைஞர்கள் இருவரும் உணவினைச் சமைத்து எடுத்துக்கொண்டு காலைவேளையில் மதுரை நகரில் தெருக்களில் இருக்கும் மனநலமற்ற மனிதர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.


                        காலை உணவிற்கு பின்னர் இவர்கள் எங்காவது சென்றுவிட்டு பின்னர் புறப்பட்ட இடத்திற்கே வரும் பழக்கத்தில் இருப்பதால் காலை ஒருவேளை மட்டுமே உணவு வழங்க முடிகிறது என்றும் விளக்கினார்கள்.

                        ஆசிரியர் பயிற்சிக்குப் பிறகு, ஆண் செவிலியர் பயிற்சியும் முடித்த திரு.சேது இவர்களில் காயமுற்றவர்களுக்கு சிகிச்சையும் அளித்துவருகிறார்.
அதிகாலை மூன்றுமணிக்கு எழு்ந்து சமைக்கும் குமார் சுரபிக்கு கிடைத்த பரிசு.
பாரதி சொல்லும் ஒரு வரிதான் நினைவில் எழுகிறது
                                  ஊருக்கு உழைத்திடல் யோகம்
                                  அது எல்லோருக்கும் அமையாது

                       சுரபியின் ஒரு நாள் செலவு 3800 ரூபாய்கள்,ஒரு மாத செலவு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள்! மதுரையின் பலபகுதிகளில் இருக்கும் சந்தை வியாபாரிகள் சுரபி பற்றி அறிந்து ஒரு கிலோவிற்காண விலையில் மூன்று கிலோ காய்கறிகளை தந்து வருகிறார்கள். அந்த எளிய விவசாய மனிதர்கள் உண்மையில் எவ்வளவு பெரியவர்கள்.

                  சில மளிகைக்கடைகள் இவர்களுக்கு பொருட்களை இலவசமாகவோ குறைந்த விலைக்கோ தருவதால் சுரபி தொடர்ந்து செயல்படுகிறது. இப்படி எளிய மனிதர்களின் பங்களிப்போடு தொடர்ந்து வருகிறது சுரபி தனது சேவையினை..... ( சுரபி வரலாறு  கஸ்தூரி ரங்கன்அய்யாவின் முகநூல் பக்கத்திலிருந்து)

                அடுத்ததாக அமைப்பிற்கு சட்ட ஆலோசனை வழங்க வேண்டி மதுரை உயர்நீதிமன்ற கிளையிலிருந்து திரு. பரஞ்சோதி (வழக்கறிஞர்)  அவர்கள் வருகை தந்து தகுந்த ஆலோசனைகளை வழங்கி சென்றுள்ளார்கள்.

               புதிய உறுபினர்களாக திரு. வீரமாத்தி சுரேஷ் அய்யா மற்றும்  சுகந்தன் அய்யா ஆகியோர் இணைந்தனர்.

            சுரபி அறக்கட்டளைக்கு விதைக்கலாம் அமைப்பினரால்  ரூ.4200 நன்கொடை வழங்கப்பட்டது. அமைப்பின் மூத்த உறுப்பினர் திரு மணி சங்கரன் அய்யா வழங்க திரு. சேது அவர்கள் அதை பெற்றுக்கொண்டார்.

          விதைக்கலாம் அமைப்பின் உறுப்பினர் திரு. சந்தோஷ் அவர்கள் ரூ. 800 அமைப்பிற்காக  வழங்கினார். அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

          இறுதியாக பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் திரு. ரவிச்சந்திரன் அய்யா அவர்கள் நன்றி கூறினார்.
              
          

     










          
                                                                                       நன்றிகளுடன்,

                                                                     விதைக்KALAM அமைப்பினர்.
              

                          
                    

3 comments:

  1. உறுப்பினர்கள் தங்களுடைய பயோ டேட்டாவை இதில் கமண்ட்டுக

    ReplyDelete

Powered by Blogger.

தோழர்கள்

About

புதுகை நண்பர்களால் மேதகு கலாம் அவர்களின் மறைவை ஒட்டி ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 11/08/2015 துவக்கப்பட்ட அமைப்பு.

Popular Posts