இன்று 15-10-2015 மறைந்த மேதகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஆ.பெ.ஜ அப்துல் கலாம் அய்யா அவர்களின் 85- வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக கிள்ளனூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள பூவன்குலத்தில் 85 மறக்கன்றுகள் நடுவதாக முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கிள்ளனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமிகு.ச. கோவிந்தசாமி அய்யா அவர்களின் மகன் திருமிகு சோ. சின்னப்பா மற்றும் ஊர் மக்களின் உதவியினால் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
85 கன்றுக்கான குழிகள் அனைத்தும் ஊர் மக்களால் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு தாயார் நிலையில் இருந்தது. மரக்கன்றுகள் அனைத்தும் கிராம மக்காளால் பெறப்பட்டிருந்தது. மேலும் கன்றுகளுக்கான கூண்டுகள் அனைத்தும் விதைக்காலம் அமைப்பின் மூலம் அளிக்கப்பட்டது.
மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக கவிஞர். திருமிகு. முத்துநிலவன் அய்யா அவர்களும், திருமிகு. பொன். கருப்பையா அய்யா அவர்களும் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
நிகழ்வின் முதல் கன்றை ஊராட்சி மன்ற தலைவர் அய்யா அவர்களால் நடப்பட்டது. இரண்டாவது கன்று நிலவன் அய்யா அவர்களாலும், மூன்றாவது கன்று பொன். க அய்யா அவர்களாலும் மற்றும் விதைக்கலாமில் பங்குபெற்ற அணைத்து உறுப்பினர்களாலும் மற்றும் ஊர் பொதுமக்களாலும் நடப்பட்டது.
மேலும் சிறப்பாக இன்றைய நிகழ்வின் 54 – வது கன்றானது விதைக்காலாம் அமைப்பின் 100 – வது கன்று என்பதை பெருமகிழ்ச்சியுடன் அமைப்பின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
85 கன்றுகள் சிறப்பான முறையில் நடப்பட்டு மேதகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ஆ.ப.ஜ அப்துல் கலாம் அய்யா அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
நிகழ்வில் திருமிகு வீரகுமார், வீரமாத்தி சுரேஷ், கனகமணி, அழகுராஜ், பாண்டியன், நாகராஜன், மூர்த்தி, அப்துல் ஜலில், நடராஜன், பால்ராஜ், சக்திவேல், கோபால், செல்லையா, காந்திநாதன், பிச்சை, மணி, ராமையா, கனகராஜ், ராமதாஸ், UK கார்த்திகேயன், முகுந்தன், மணி சங்கரன், கஸ்துரி ரெங்கன், நாகபாலாஜி, ஸ்ரீமலையப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.
எட்டாம் நிகழ்வு மாந்தாங்குடி MA பால் பண்ணையில் நடைபெறும் என்பது அமைப்பினருக்கு தெரிவிக்கப்பட்டது.
FLASH NEWS
Saturday, November 07, 2015
Subscribe to:
Post Comments (Atom)
தொடர வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி அய்யா
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி அய்யா
Deleteவிதைத்துக்கொண்டே இருங்கள் நண்பர்களே! யாராவது அறுவடை செய்யட்டும். நல்லன செய்யும் உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன். - இராய செல்லப்பா
ReplyDeleteநன்றி
Deleteபயணம் வெல்ல வாழ்த்துகள். தங்களின் தள தலைவாசகமாக, “விதைத்தவன் உறங்கலாம், விதைகள் உறங்காது” என்னும் தொடரை அமைக்கலாம். அப்புறம், பத்தி பிரித்து எழுதுவது படிப்பவரைக் களைப்படையாமல் படிக்கச் செய்யும். நன்றி
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி அய்யா, அப்படியே செய்கிறோம்.
Delete