இன்று (25/10/15) விதைக்கலாமின் ஒன்பதாவது நிகழ்வு புதுக்கோட்டை காந்திநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அரங்கேறியது இம்முறை 19 கன்றுகள் நடப்பட திட்டமிடப்பட்டு, அதற்கான குழிகள் அனைத்தும் அப்பள்ளியின் மூலமே அமைக்கபட்டுயிருந்தது கூண்டுகளும் பள்ளியின் மூலமாகமே பெறப்பட்டிருந்தது. கன்றுகள் அனைத்தும் விதைக்கலாமின் அமைப்பை சேர்ந்தவர்களால் அரி மளதிலிருந்து கொண்டுவரப்பட்டிருந்தது.
நிகழ்வு காலை 6.15 மணிக்கு தொடங்கியது முதல் கன்றை பள்ளி மாணவன் மூலமாக நடப்பட்டு, மேற்பட்ட கன்றுகள் அனைத்தும் அமைப்பை சேர்ந்தவர்களால் சீராகவும் நேர்த்தியாகவும் நடப்பட்டது.
நிகழ்விற்கு ஏற்பாடு செய்த விதைக்கலாம் அமைப்பின் உறுப்பினர் சாந்தகுமார் அவர்களுக்கும், பள்ளித்தலைமயாசிரியர் ராஜு அய்யா அவர்களுக்கும், 20 கன்றுகளுக்கும் கூண்டுகள் மற்றும் குழிகள் அமைத்துதந்த கண்ணன் அய்யா அவர்களுக்கும் அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
நிகழ்வில் ராமலிங்கம், இளவரசன், முகுந்தன், மாணவர்கள் சஞ்சய், நிஷா, சௌந்தர்யா, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ஷீலா, சந்தோஷ், பாக்கியராஜ், கஸ்தூரி ரெங்கன், பாண்டியன், அப்துல் ஜலில், மணி சார், காசிப்பாண்டி, UK கார்த்திகேயன், பிரபாகரன், ஸ்ரீதரன், வீரமாத்தி சுரேஷ், நாகநாதன், நாகபாலாஜி, ஸ்ரீமலையப்பன், வசந்தா, ராணி ரமாதேவி, ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
FLASH NEWS
Wednesday, November 11, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment